இடுகையிட்டது
Shansri
Welcome
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மறவாமல் நினைத்தீரய்யா
மனதார நன்றி சொல்வேன் -2
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே -2
நன்றி நன்றி ஐயா ஆ... ஆ...
கோடி கோடி நன்றி ஐயா -2
1. எபினேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே -2
ஏல்ரோயி ஏல்ரோயி
என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன் -2
2. பெலவீன நேரங்களில்
பெலன் தந்தீரய்யா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
3. தடைகளை உடைத்தீரயா
தள்ளாட விடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
4. குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீர்-என்
ஊழியம் செய்வதற்கு போதுமான
பணம் தந்து-மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
கருத்துகள்
கருத்துரையிடுக