உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

கடுகு விதையைக் குறித்து பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது?About mustard seed from bible..

 


கடுகு விதையைக் குறித்து பைபிளில் என்ன  சொல்லப்பட்டுள்ளது?

கடுகு விதையைக் குறித்து வேதாகம புத்தகத்தில் இப்படியாய் சொல்லப்பட்டிருக்கிறது.

மத்தேயு 13: 31,32 ல்,

பரலோகராஜ்ஜியம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.

 அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும் போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும்.

விளக்கம்;
 கடுகு விதையானது எல்லா விதைகளிலும் சற்று சிறியதாயிருந்தும், அது வளர்ந்து பெரிய மரமாக காட்சியளிக்கும். மேலும் கடுகு விதைக்கு ஒரு தனித்துவமான சிறப்பு உண்டு.

 அது என்னவென்றால் கடுகு விதை எல்லா சூழ்நிலையிலும் தாங்கி நின்று வளரக்கூடியது.

 எல்லா விதமான காலநிலையிலும் பருவ நிலையிலும் கடினமான காலத்தையும் தாங்கி வளரக்கூடிய ஒரு பயிர் ஆகும்.

 இயேசுகிறிஸ்து இந்த பூமியில் வாழும் காலத்தில் அநேக உவமைகளால் மக்களோடு பேசியிருக்கிறார். பரலோக ராஜ்ஜியத்தை குறித்து அவர் பேசிய உவமைகளுள் இந்த கடுகு விதையைக் குறித்த உவமையும் ஒன்று.

 விதையானது தேவனுடைய சத்திய வசனத்துக்கு உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. நிலம் மனிதனின் இருதயம்.

 சுவிஷேசம் என்னும் விதை ஒவ்வொருவருடைய இதயத்திலும் அது விதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அது  சபைகள் மூலமாக இன்று நடந்தேறி வருகிறது.

 இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் ஆண்டவர் கடுகுக்கு ஒப்பான தேவ வார்த்தைகளை அவர் சீஷர்களிடத்தில் விதைத்தார் அது வளர்ந்து அநேக சபைகளாக உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.

 இன்று நம் இருதயத்தில் விதைக்கப்படும் தேவ வர்த்தைகள் என்னும் விதை ஆழ ஊன்றப்பட்டு எல்லா வாழ்கை சூழ்நிலையிலும் சகித்து அது பெரிய மரமாக வளர நாம் இடம் கொடுக்க வேண்டும்.

 அப்போது தான் அநேக பறவைகள் வந்து கூடுகட்டி வாழும் கடுகு மரம் போல் நாம்  வளர்வோம்.

நாம் சத்தியம் என்னும் இயேசுவை அநேகருடைய இதயத்தில் விதைத்து ராஜாவாகிய கிறிஸ்துவின் வருகையில் ஒருகூட்ட ஜனத்துடன் அவருக்கு எதிர்கொண்டு செல்லமுடியும். இந்த வார்த்தைகள் உங்களுக்கு பயனுள்தாக இருக்கட்டும். ஆமென்

கடுகு மரம்


<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1331682794440980"
     crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-format="autorelaxed"
     data-ad-client="ca-pub-1331682794440980"
     data-ad-slot="7553128011"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>




 


கருத்துகள்