உச்சிதமான கோதுமையினால் அவர்களை போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81: 16

தர்மம் செய்வதைக்குறித்து இயேசு கிறிஸ்து என்ன சொல்லி இருக்கிறார்?

 

தர்மம் செய்வதைக்குறித்து இயேசு கிறிஸ்து என்ன சொல்லி இருக்கிறார்?

கீழே உள்ள வசனங்களை வாசித்து ஆராயுங்கள்.

1.மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

செய்தால், பரோலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும் போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வது போல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே;

அவர்கள் தங்கள் பலனை  அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3. நீயோ தர்மம் செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமா யிருப்பதற்கு,

உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.

4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.

மத்தேயு: 6; 1-4

இந்த வசனங்களில் இருப்பதை நம் வாழ்க்கையிலே கடைப்பிடித்து பிதாவாகிய தேவன் நம்மில் மகிமைப்படும்படி நாம் வாழ்வோமாக. ஆமென்.




கருத்துகள்