- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1. நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை;
தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும்,
2. சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும் அந்தகாரப்படாதற்கு முன்னும்,
3. மழைக்குப்பின் மேகங்கள் திரும்ப திரும்ப வராததற்கு முன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி,
பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து,
பலகணி வழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டு போகிறதற்கு முன்னும்,
4. ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெரு வாசலின் கதவுகள் அடைப்பட்டு,
குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்க வேண்டியதாகி,
கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கி போகாததற்கு முன்னும்,
5. மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி ,
வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி,
பசித்தீபனமும் அற்றுபோகாததற்கு முன்னும்,
மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்கு முன்னும்,
6. வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி,
ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,
7.இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி,
ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும்,
அவரை உன் வாலிபப் பிராயத்திலே நினை.
8. மாயை மாயை , எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
🙏இந்த வார்த்தைகள் வேதாகமத்தில் பிரசங்கி:12:1-8 என்னும் அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
🙏இந்த வசனம் தாவீது ராஜாவின் மகன் சாலமோன் என்பவர் எழுதியது.
🙏 மேலும் அவர் வாலிப பிள்ளைகள் தன் வாலிப வயதில் கர்த்தரை தேடி தொழுதுக்கொள்வதின் அவசயத்தை இந்த வசனங்களில் அறிவுரையாக எழுதியுள்ளார்.
🙏இந்த வசனங்களை ஆராய்ந்து அதின் அர்த்தத்தை உணர்ந்து வாலிப பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை செவ்வைப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.


கருத்துகள்
கருத்துரையிடுக